மும்பை: வேலைக்கு செல்லும் பெண்களை அதிகம் கொண்டுள்ள சத்தீஸ்கர் மாநிலத்தில் இம்முறை சட்டப்பேரவைக்கு 13 பெண்கள் தேர்வாகி உள்ளனர். இது, 2013ஆம் ஆண்டு தேர்தலில் 10 பேர் என்பதை விட அதிகம். தேர்தல் நடந்த மற்ற மாநிலங்களான மத்தியப் பிரதேசம், மிசோரம், ராஜஸ்தான், தெலுங்கானா ஆகியவற்றில் குறைந்த எண்ணிக்கையிலேயே பெண்கள் தேர்வு செய்திருப்பது தேர்தல் புள்ளி விவரங்களை இந்தியா ஸ்பெண்ட் ஆய்வு செய்ததில் தெரிய வந்துள்ளது.

ஐந்து மாநிலங்களில் மொத்தம் 8,249 பேர் போட்டியிட்டனர்; இதில் பெண்களின் எண்ணிக்கை 696 (8.4%) ஆகும். அவர்களில் 62 பேர் (9.1%) சட்டமன்றத்திற்கு தத்தமது மாநிலங்களில் தேர்வாகியுள்ளனர்.

சத்தீஸ்கர்: இம்மாநிலத்தை ‘பின்தங்கியது’ என்று நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி அமிதாப் காந்த், 2018 ஏப்ரலில் ஜமியா மில்லியா பல்கலைக்கழக உரையின் போது குறிப்பிட்டிருந்தார். இருப்பினும், 1000 பேருக்கு ஒன்று என கணக்கிடப்படும் நாட்டின் வேலைவாய்ப்பு எண்ணிக்கை விகிதத்தில் (WPR) பெண்களுக்கான சிறந்த வேலைவாய்ப்பை கொண்டிருக்கிறது. “சங்வாரி” எனப்படும் முற்றிலும் பெண்களை கொண்டவாக்குப்பதிவு மையத்தை தேர்தல் ஆணையம் முதல்முறையாக இங்கு தான் அமைத்தது.

Employment And Empowerment Indicators
State Female Literacy (In %) Female Worker-Population Ratio (Persons employed per 1,000 persons) Per Capita Income (In Rs)* Women Involved In Households Decision-Making (In %)
Chhattisgarh 66.3 66.6 84,265 90.5
Mizoram 89.27 52.2 1,28,998 96
Madhya Pradesh 59.4 15.9 74,590 82.8
Rajasthan 56.5 18.8 92,076 81.7
Telangana 57.9 42 1,59,856 81.0

குறிப்பு: 2015-16ஆம் ஆண்டுக்கான தரவு. *தனிநபர் வருமான தரவு 2016-17 ஆண்டுக்கானது. குறைந்த குறிகாட்டி சிவப்பில் குறிக்கப்பட்டுள்ளது.
ஆதாரம்: National Family Health Survey 2015-16, Fifth Annual Employment Unemployment Survey

மிசோரம்: வடகிழக்கின் இறுதியில் அமைந்துள்ள இம்மாநிலம் 89.27% எழுத்தறிவு விகிதம் கொண்டுளது; இது தேசிய சராசரியை (74.4%) விட அதிகம். தேர்தல் நடந்த ஐந்து மாநிலங்களில், பெண்கள் வேலைவாய்ப்பில் இரண்டாவது இடத்தையும் (WPR 52.2%), தனிநபர் வருமானம் (ரூ 1,28,998) கொண்டுள்ள இம்மாநிலம், 2018 தேர்தலில் எந்த ஒரு பெண்ணையும் சட்ட மன்றத்திற்கு தேர்வு செய்யவில்லை.

ஆண்களை விட 19,399 பெண்களை கூடுதலாக கொண்டுள்ள இம்மாநிலம், 31 ஆண்டுகளில் இரண்டு பெண் அமைச்சர்களை மட்டுமே சந்தித்துள்ளது; 1987ஆம் ஆண்டில் லால்ஹிம்புய் ஹர் மற்றும் 2014 (இடைத்தேர்தல்) லாலாம்புய் சாங்து ஆகியோர்.

தேர்தல் நடந்த ஐந்து மாநிலங்களில், வீட்டில் தன்னிச்சையாக முடிவெடுத்தல் போன்ற பெண்களுக்கு அதிகாரம் வழங்கலில் மிசோரம் அதிகபட்ச விகிதம் (96%) கொண்டுள்ளது.

பெண்களுக்கு அதிகாரம் அளித்தலிலும், அவர்களை மக்கள் பிரதிநிதியாக சட்டப்பேரவைக்கு தேர்வு செய்வதிலும் தொடர்பு என்பது எளிதாக இல்லை.

மத்தியப்பிரதேசம்: இம்மாநிலத்தில் 2013ஆம் ஆண்டில் 29 பெண்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தனர்; 2018 தேர்தலில் இது, 21 ஆகக் குறைந்துள்ளது. இம்மாநிலம் பெண்களின் வேலைவாய்ப்பில் (WPR 15.9%) மற்றும் சொத்து உரிமை, முடிவு எடுக்கும் அதிகாரம் போன்ற மகளிர் மேம்பாட்டு குறிகாட்டியில் குறைந்த எண்ணிக்கையை கொண்டுள்ளது. இந்த ஐந்து மாநிலங்களில் குறைந்த தனிநபர் வருமானம் (74,590 ரூபாய்) என்ற விகிதத்தை இது கொண்டிருக்கிறது.

மத்தியப்பிரதேசத்தில் இதுவரை பதவியில் இருந்த பாரதிய ஜனதா அரசு, தேர்தலில் பெண்களுக்கென தனி தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. ‘நரெ சக்தி சங்கல்ப் பத்ரா’ என்ற பெயரில் வெளியான இந்த அறிக்கையில் தகுதி வாய்ந்த பெண்களுக்கு ஆட்டோ- கியர் இருசக்கர வாகனங்கள் வழங்கப்படும் என்பது உள்ளிட்ட பல அறிவிப்புகள் இடம் பெற்றிருந்தன.

ராஜஸ்தான்: பெண் முதல்வரான வசுந்தரா ராஜே தலைமையில் ஆட்சி நடந்த போதும் ராஜஸ்தானில் பெண் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 2013ஆம் ஆண்டில் 27 ஆக இருந்தது, 2018-ல் 23 ஆக குறைந்தது. இம்மாநிலத்தில் ஆண் வாக்காளர்களை விட (73.8%) பெண் வாக்காளர்கள் (74.7%) எண்ணிக்கை அதிகம். எனினும் 2013ஐ விட (75.23%) இது குறைவு என்பது மாநில தேர்தல் ஆணைய புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இம்மாநிலம், குறைந்த பெண் எழுத்தறிவு விகிதம் (56.5%) மற்றும் 10 -11ஆம் வகுப்பு படித்த பெண்கள் விகிதத்தில் கடைசி இடத்தில் உள்ளது என்று, 2018 டிச. 5-ல் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை வெளியிட்டிருந்தது. இங்கு, பெண்களின் வேலைவாய்ப்பு எண்ணிக்கையும் கணிசமாக குறைவாக உள்ளது (WPR 18.8%).

தெலுங்கானா: புதிய மாநிலமான இங்கு இரண்டு முறை மட்டுமே தேர்தல் நடந்துள்ளது. 2014 தேர்தலில் இங்கு ஒன்பது பெண் எம்.எல்.ஏ.க்கள் தேர்வு செய்யப்பட்ட நிலையில், இம்முறை இது குறைந்து, 119 பேரை கொண்ட சட்டப்பேரவைக்கு ஆறு பெண் எம்.எல்.ஏ.க்கள் (5%) மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

வாரிசுகளின் ஆதிக்கம் நிரூபிப்பு

இந்த சட்டமன்ற தேர்தல்களில் வாரிசுகளுக்கு முக்கியத்துவம் என்பது பிரதான இடத்தை வகித்தது. வழிவழியாக வெற்றி பெற்ற இடங்கள், ஒரே அரசியல் குடும்ப உறுப்பினர்கள் அல்லது அரசியல் தொடர்புகள், அல்லது உறவினர் வேட்பாளர்கள் ஆகியோரின் ஆதிக்கம் நீண்டகாலமாக இருந்து வருகிறது.

ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் வாரிசு வேட்பாளர்கள் 67 பேர் போட்டியிட்டனர் என்று, 2018 டிச.7-ல் இந்தியன் எக்ஸ்பிரஸ் பகுப்பாய்வு செய்தி வெளியிட்டிருந்தது.

இவர்களில் 35 (52%) பேர் வெற்றி பெற்றதாக, இந்தியா ஸ்பெண்ட் பகுப்பாய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

மத்தியப் பிரதேசத்தில், 36 மரபுரிமை சார்ந்த இடங்களில் ஒன்பது பெண் அரசியல் வாரிசுகளும் போட்டியிட்டனர். 2018 சட்டமன்றத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட 21 எம்.எல்.ஏ.க்களில் ஏழு பேர் பெண் அரசியல் வாரிசுகள் ஆவர்.

ராஜஸ்தானில் 23 பாரம்பரிய வழிவந்த இடங்களுக்கு ஆறு பெண்கள் உட்பட 23 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் வென்ற ஆறு பெண்களுமே வலுவான அரசியல் பின்னணியில் இருந்து வந்தவர்கள்.

சத்தீஸ்கரில் தேர்ந்தெடுக்கப்பட்ட 13 பெண்கள் எம்.எல்.ஏ.களில் ஐந்து பேர் வாரிசு வேட்பாளர்கள்.

"பெண்களுக்கு ஆண்களை போல் வலுவாக போட்டியிட முடியாது என்று கட்சிகள் மத்தியில் நம்பிக்கை உள்ளது. எனவே கட்சிகள் பெண்கள் வேட்பாளர் வாய்ப்பு கொடுக்க மறுக்கின்றன, " என்று, சமுதாய மேம்பாட்டு தொடர்பான ஆய்வு மைய அரசியல் ஆய்வாளரான பிரவீன் ராஜ், இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார். நீண்ட காலமாக கட்சிக்கு சேவை செய்தவர்கள் மற்றும் அல்லது தங்கள் சொந்த பலம், ஆதரவாளரை கொண்ட பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது.

ஒதுக்கீடும் உதவும்

அரசியல் கட்சிகள் பெண்களுக்கு -- ஊராட்சி அளவில் குறைந்தபட்சம் 33% இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன -- போட்டியிடும் இடங்களை ஒதுக்கி வைக்க வேண்டிய கட்டாயமில்லை என்பதால், கட்சிகளில் பாதிக்கும் மேல் ஆண் வேட்பாளர்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது.

ஊராட்சி தேர்தல்களின் முடிவுகளை ஆய்வு செய்தபோது, ​​அந்த அளவிலான இடஒதுக்கீடுகள் பெண்களில் சட்டமன்றங்களிலும், பாராளுமன்றத்திலும் என உயர்மட்ட நிலைகளில் போட்டியிடுவதை அதிகப்படுத்தியுள்ளன. உள்ளூர் அளவில் சராசரியாக 3.4 ஆண்டுகள் பாலின ஒதுக்கீட்டிற்கு உட்பட்டிருக்கும் தொகுதிகளில், பாராளுமன்றத்திற்கான 38.75 பெண் வேட்பாளர்கள் கூடுதலாக ஒதுக்கீடு பெற்றனர்; இது, 1991ஆம் ஆண்டுக்கும், 2009 க்கும் இடையில் 35% அதிகரித்ததாக, ஐ.இசட்.ஏ. தொழிலாளர் பொருளாதார இன்ஸ்டிடியூட், 2018 ஜனவரியில் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மாநில சட்டமன்றங்களை எடுத்துக் கொண்டால், கூடுதலாக 67.8 பெண் வேட்பாளர்கள் தொகுதிகளில் அலுவலகத்தில் இயங்கினர்; இது, சராசரியாக 2.8 ஆண்டு ஒதுக்கீடு ஆகும் என்று, அதே கட்டுரை அடிப்படையில் இந்தியா ஸ்பெண்ட் 2018 ஜூன் 30-ல் கட்டுரை வெளியிட்டிருந்தது.

"இது கட்டாயமாக்கப்பட வேண்டும் [அல்லது] அரசியல் கட்சிகள் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் பெண் வேட்பாளர்களுக்கு தேர்தல் நியமனம் / வழங்க வேண்டும்” என்று சமுதாய மேம்பாட்டு தொடர்பான ஆய்வு மைய அரசியல் இயக்குனர் சஞ்சய் குமார் தெரிவித்தார்.

(அபிவ்யக்தி பானர்ஜி, வதோதரா எம்.எஸ்.யு. பல்கலைக்கழக அரசியல் அறிவியல் முதுகலை மாணவர், இந்தியா ஸ்பெண்ட் பயிற்சியாளர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.